fbpx

இயக்குநர் சபை - மல்டி பினான்ஸ் பி.எல்.சி.

தலைவர் / CBSL ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிர்வாகமற்ற சுயாதீன இயக்குநர்

திரு. இமால் பொன்சேகா மல்டி பினான்ஸ் பி.எல்.சி.(Multi Finance PLC) இன் தலைவர் ஆவார். இதுவரை இவர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங், Chevron Lubricant Lanka PLC போன்றவற்றில் பணிப்பாளர் சபையிலும் மற்றும் Eureka Technology இல் பங்காளராகவும் சேவையாற்றியுள்ளார்.

இவர் Indian School of Business, Kellogg School of Management (North Western University) / Wharton School (University of Pennsylvania) ஆகியவற்றில் முதுகலை கல்வியைப் பெற்றுள்ளார்.

இவர் JWT, Unilever, Glaxco-Smithkline, Coca-Cola மற்றும் Chevron போன்ற பல்தேசிய கம்பனிகளிலும் மத்திய கிழக்காசிய நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் மற்றும் ஏனைய துணைக் கண்டத்திலும் தனது சேவையை ஆற்றியுள்ளார்.

அவர் வியட்நாமில் GSK க்காக பனடோல் மற்றும் பிற OTC அடையாளங்களை அறிமுகப்படுத்தினார் மற்றும் பங்களாதேஸ்க்கு ஹேமாஸ் நுகர்வோர் தர அடையாளங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்தார்.

திரு. இமால் பொன்சேகா மிகப்பெரிய மிட்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இலங்கையில் உள்ள மிகப்பெரிய உள்;ர் தனிநபர் பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.

இவர் சந்தைப்படுத்தல் சகோதரத்துவத்திற்குள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளார். சர்வதேச விளம்பர சங்கத்தின் (இலங்கை அத்தியாயம் 2007-2008) கடந்த காலத் தலைவராகவும், இலங்கை விளம்பர விருதுகளின் ஸ்தாபகர் ஆகவும் தலைவராகவும் (2006), இலங்கை சிறந்த தர அடையாளத்துக்கான ஜூரியின் தலைவராகவும் (2007) “EFFIES" இலங்கை நடுவர் மன்றத்தின் தலைவராகவும் (2009,2012,2017), இலங்கை விளம்பர விருதுகளின் அறங்காவலர்களின் தலைவராகவும் (2010) செயற்பட்டுவந்தார். மேலும் அவர் Asia Pacific Effie விருதுகள் ஜூரிக்கு நியமிக்கப்பட்டார் (2016,2017,2018). பின்னர் உலகளாவிய முயற்சிகள் திட்டம் (2016) மற்றும் மத்திய கிழக்கு வட ஆபிரிக்கா திட்டம் (2016) ஆகியவற்றிற்கான ஜூரராக அழைக்கப்பட்டார்.

சுதந்திரமற்ற நிர்வாக இயக்குநர்ஃதலைமை நிர்வாக அதிகாரி

திரு. புஸ்பிக்க ஜெயசுந்தர 01/08/2013 முதல் மல்டி பினான்ஸ் பி.எல்.சி (Multi Finance PLC) இல் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். வங்கி மற்றும் நிதித் துறைகளில் கிட்டத்தட்ட 25 வருட அனுபவம் பெற்றவர்.

 

அவர் ஒரு புகழ்பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனத்தில் (NBFI) நிதி நிர்வாகியாக தனது தொழிலை தொடங்கினார். பின்னர் HNB மற்றும் யூனியன் வங்கி என இரண்டு புகழ்பெற்ற வங்கிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். சில்லறை மற்றும் கார்ப்பரேட் கடன், திட்ட நிதி, குத்தகை, விளிம்பு வர்த்தகம், வாடகை கொள்முதல், அடகு மற்றும் மீட்டெடுப்பு போன்ற துறைகளில் அனுபவம் பெற்றவர். யூனியன் வங்கியில் குத்தகை நடவடிக்கைகள் முழுவதையும் செயற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்ததுடன் மற்றும் ஒன்லைன் கடன் அனுமதியை பெறுவதற்கான GL தொகுதியின் முழு தானியங்கி தகவல் தொழிநுட்ப முறையை விருத்திசெய்தார். அதன் முதல் ஆண்டின் செயல்பாட்டில்; ரூ 1.0 பில்லியனைத் தாண்டி NPL விகிதம் 0.1 க்கும் குறைவாக இருந்தது.

 

வங்கித் துறைகளான Head of Leasing மற்றும் கொமர்ஷல்ல் கிரெடிட் போன்றவற்றில் இருந்து விலகி கேபிடல் அலையன்ஸ் பைனான்ஸ் பி.எல்.சி யில் சேர்ந்து அதன் அணியை வழிநடத்தினார். தொழில்துறையில் சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தி முழு நிறுவனத்தையும் அவர் புதுப்பித்ததுடன் மற்றும் வணிக செயல்முறைகளை மீண்டும் வடிவமைத்தார். எனவே அவர் தொழில்துறையில் புதுமையான புதிய தயாரிப்புகளுக்கு முன்னோடியாக விளங்கினார். அவற்றில் சில, வயது வரம்பைப் பொருட்படுத்தாமல் வைப்புத் தொகையாளர்களுக்கான இலவச சுகாதார காப்பீட்டுத் முறைமை, வெகுமதிகளின் அடிப்படையில் நேர வைப்புத் தொகையாளர்களுக்கு வழங்கப்படும் முதல் வெளிநாட்டு பயண தொகுப்பு, முதல் காப்பீட்டு கடன் மற்றும் ஒரு புள்ளி திட்டம் விநியோகஸ்தர் முதலியனவாகும். அவர் BPRச (Business Process Re-engineering ) அமைப்பு, மற்றும் மறு வடிவமைப்பிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

 

Sikkim Manipal University இல் வணிக நிர்வாகம் நிதி நிபுணத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் இங்கிலாந்தின் சார்ட்டட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் (Chartered Institute of Management Accountants) இலும் தனது பட்டத்தை பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்தின் வணிக மேலாண்மை நிறுவனத்தில் உறுப்பினராவதுடன் மற்றும் கடன், குத்தகை, வாடகை கொள்முதல் மற்றும் உறவு சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் விரிவுரையாளராகவும் இருந்து வருகிறார்.

சுதந்திரமற்ற நிர்வாக இயக்குநர்

இவர் 2002 ஆகஸ்ட் இல் மல்டி பினான்ஸ் பி.எல்.சி (Multi Finance PLC) இன் நிர்வாக சபையில் நியமிக்கப்பட்டார். திருமதி. சம்பிகா அத்தபத்து நிறுவனத்தின் இயக்குநர்-சட்டம் (Director-Legal) ஆக பணியாற்றுகிறார்- இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் பிரசித்த நொத்தாரிசு ஆவார். திருமதி. சம்பிகா அத்தபத்து 1991 இல் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். மேலும் வழக்கறிஞர் மற்றும் சட்ட அதிகாரியாக 21 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். நீதிமன்ற வேலை, ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்த வரைவு மற்றும் சட்ட ஆலோசனை சேவைகள், பதிவு செய்யப்பட்ட கம்பனி செயலாளர் போன்ற துறைகளிலும் தனது அனுபவத்தினை பெற்றுள்ளார்.

 

இவர் மல்டி பைனான்ஸில் தனது நீண்ட பதவிக் காலத்தில் அவர் சட்ட அதிகாரி, இயக்குநர் மற்றும் பொது மேலாளராக பணியாற்றுகிறார்.. திருமதி. சம்பிகா அத்தபத்து தற்போது தலைமை அலுவலகம் மற்றும் கிளை காரியாலயங்களில் சட்ட மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறார். இலங்கை மத்திய வங்கி, நிதி மற்றும் வங்கி நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் நடத்திய பல பயிற்சி திட்டங்கள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் அவர் பங்குபற்றியுள்ளார்

 

சுயாதீனமான நிர்வாகமற்ற இயக்குநர்


திரு. சேனக் டி சேரம் தனது ஆரம்பக் கல்வியை சென். தோமஸ் கல்லூரி மவுண்ட் லாவனியாவில் முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார். திரு.சேனக் டி சேரம் 2002 ஆம் ஆண்டில் சட்ட வழக்கறிஞராக சத்தியபிரமாணம் செய்து 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில் மற்றும் வணிகச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்று வருகிறார். திரு. சேனக் டி சேரம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை சட்டத்தையும் பெற்றார். திரு. சேனக் டி சேரம் 2008 ஆம் ஆண்டிற்கான CIMA என பொதுவாக அறியப்பட்ட சார்ட்டர்டு இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட் (Chartered Institute of Management Accountants (UK)) இன் உறுப்பினராகவும் உள்ளார்.


நீதிமன்ற நடைமுறை விதிகள் மற்றும் பொருத்தமான சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் குழுவுக்கு திரு. சேனக் டி சேரம் நியமிக்கப்பட்டுள்ளார்.


திரு. சேனக் டி சேரம் 2002 முதல் இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் தற்போது அதன் நிதிக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். திரு டி சரம் 2004 ஆம் ஆண்டில் ஜூனியர் தேசிய சட்ட மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது இப்போது இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். திரு. சேனக் டி சேரம்; 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய சட்ட மாநாட்டின் கன்வீனராக (Convenor) நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிதி மற்றும் கொள்முதல் குழுவின் உறுப்பினராக திரு. சேனக் டி சேரம் நியமிக்கப்பட்டார். இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான குழுவின் கன்வீனராக(Covenor) திரு. சேனக் டி சேரம் நியமிக்கப்பட்டுள்ளார். நகர்ப்புற தீர்வு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்க இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தினால்; திரு. சேனக் டி சேரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


திரு. சேனக் டி சேரம் இலங்கையில் துடுப்பாட்டத்திற்கான தேசிய விளையாட்டுக் குழுவின் தேர்தல் குழுவில் உறுப்பினராகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையில் துடுப்பாட்டத்திற்கான தேசிய தேர்வாளராகவும் உள்ளார்.


கடன் மீட்பு, அபார்ட்மென்ட் (Apartment) உரிமையாளர் சட்டம், பாரேட் மரணதண்டனை சட்டம், ஊடக சுதந்திரம், தொழிலாளர் சட்டம் மற்றும் கணக்கியல் நடைமுறைகள் குறித்து சட்ட நிறுவனங்களில் மற்றும் சட்ட மாணவர்களுக்காக விரிவுரைகளை நடத்த திரு. சேனக் டி சேரம் அழைக்கப்படுகிறார்.

 

சுயாதீனமற்ற நிர்வாகமற்ற இயக்குநர்

டாக்டர் பிரசாத் குலத்துங்க பெயார்வே (Fairway) ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

நியூயார்க், ஜெனீவாவில் உள்ள ஹோபார்ட் மற்றும் வில்லியம் ஸ்மித் கல்லூரிகளில் இயற்பியல் விரிவுரையாளராகவும், விஸ்கொன்ஸின் உள்ள லாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் (Lawrence University) உதவி பேராசிரியராக இருந்தார். டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள Danish Institute of Management Accountants (CIMA – UK) இன் வருகை தரும் விஞ்ஞானியாகவும் பணியாற்றினார்.

டாக்டர் பிரசாத் குலத்துங்க பழைய டொமினியன் பல்கலைக்கழகத்தில் அணு மற்றும் மூலக்கூறு இயற்பியலில் PhD பட்டம் பெற்றார். மேலும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் தனது Postdoctoral Fellowship ஐ முடித்தார். மேலும் நரம்பியலில் விசேட நிபுணத்துவம் பெற்றார். டாக்டர் பிரசாத் குலத்துங்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இயற்பியலின் அறிவியல் மற்றும் கணிதத்தில் இளங்கலை; பெற்றார்.

சுயாதீனமற்ற நிர்வாகமற்ற இயக்குநர்

திருமதி துலானி டி அல்விஸ் Chartered Institute of Management Accountants (CIMA – UK) இன் இறுதி ஆண்டை பூர்த்தி செய்துள்ளதுடன் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக வணிக நிர்வாக (BBA) பட்டதாரி ஆவார்.

நிதி மற்றும் குத்தகைத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்

உங்களிடம் ஏதேனும் விசாரணைகள் இருந்தால் எங்களை 011 464 5555 ன் ஊடாக அழைக்கவும் அல்லது இப்போது விசாரணை செய்யவும்!

TOP
Click Me
CALL US
EACH ONE PLANT ONE
6 HOUR LEASING